கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் தங்களுடைய பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட்டு இன்று (21) பணிக்கு திரும்பி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், கிண்ணியாவில் பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும் பணிக்குத் திரும்பியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதன்படி, கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 31 பாடசாலைகள் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு உள்ளது. இதனை இன்று ஆரம்பிப்பதற்கு வலயக் கல்வி அலுவலகம் சகல நடவடிக்கையும் எடுத்துள்ளது.
மேலும், இதில் 25 அதிபர்கள் பணிக்குத் திரும்பிய அதேவேளை 270 ஆசிரியர்களில் 120 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருந்ததாக வலயக் கல்வி பணிப்பாளர் ஏ. நசூஹர்கான் தெரிவித்தார்.
2741 மாணவர்களில் 878 பாடசாலைக்கு வருகை தந்ததாகவும் 27 பாடசாலைகளில் வகுப்புக்கள் நடை பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






