இரத்தினபுரி – பலாங்கொடை மஸ்ஸென்ன ஹேலகந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 24 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை பலாங்கொடை பொலிஸார் நேற்று புதன்கிழமை (20) மாலை மீட்டுள்ளனர்.
குறித்த யுவதி தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்பனான – கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






