கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலை. மாணவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகே பொலிசாரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்களாகிய கஜன் மற்றும் சுலக்சனின் ஆகியவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலை மாணவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று 20 ஆம் திகதி ஆத்மார்த்தமான முறையில் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply