கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தங்களை வட மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply