அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்று லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் லொஹான் ரத்வத்த பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






