8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது தகுதி போட்டியில் ஸ்காட்லாந்து அணியும், ஓமன் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இறங்கிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.

ஸ்காட்லாந்து அணியின் ஜோஷ் டேவி 3, சஃப்யான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் 2 தலா விக்கெட்டை பறித்தனர். 123 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கோட்சர் இருவரும் களமிறங்கினர்.

5-வது ஓவரில் ஜார்ஜ் முன்சே 20 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து மத்தேயு கிராஸ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த கைல் கோட்சர் 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களம் கண்ட ரிச்சி பெரிங்டன், மத்தேயு கிராஸ் உடன் கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெறச்செய்தனர். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 17 ஓவர் முடிவில் 123 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதனால்,குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளது.

இதன் காரணமாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பங்களாதேஷ், ஸ்காட்லாந்து முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஓமன் மற்றும் பப்புவா நியூ கினி அணி வெளியேறியுள்ளது.

Leave a Reply