
டி20 உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்ற முதல் தகுதி போட்டியில் பப்புவா நியூ கினியா, பங்களாதேஷ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீரர்களாக முகமது நைம், லிட்டன் தாஸ் களமிறங்க முகமது நைம் டக் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், கேப்டன் மஹ்மதுல்லா கூட்டணி அமைத்து சிறப்பாக விலையாடி ரன்களை சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 46 , மஹ்மதுல்லா 50 ரன்கள் எடுக்க இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.
182 ரன்கள் இலக்குடன் களமிங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
தொடக்க வீரர்கள் முதல் அனைவரும் ஒற்றை இலக்கு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய விக்கெட் கீப்பர் கிப்ளின் தோரிகா மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 97 ரன்கள் எடுத்து 84ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன் 4, முகமது சைஃபுதீன், டாஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டை பறித்தனர். தகுதி சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஓமன் மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர். இரண்டாவது இடத்திற்கு ஓமன் மற்றும் பங்களாதேஷ் அணி இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பங்களாதேஷ் அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய 2-வது தகுதி போட்டியில் ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணி மோத உள்ளது. இப்போட்டியில் ஓமன் அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.





