சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும்! சாகர காரியவசம்

தற்போது சமூக ஊடகங்களில் பொய்கள் மற்றும் வெறுப்புகளை ஏற்படுத்தும் விடயங்கள் பரப்பப் படுவதால் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலே சாகர காரியவசம் இதனை தெரிவித்தார்.

மேலும், சமூக ஊடகங்களில் நிறைய தவறான கருத்துக்கள் பொய்யான விடயங்கள் பரப்புவதற்கு எதிராக சட்ட அமைப்பு எதுவும் இல்லை.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் இந்த நாட்டை அழித்து சீர்குலைத்து விடும்.

சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டை வளர்ச்சியடைய செய்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கடந்த காலங்களில் இந்த சமூக ஊடகங்கள் இவ்வாறு செயற்பட்டனவோ, இன்றும் அதே போன்ற நிலைமை சமூக ஊடகங்களில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply