சூட்சுமமான முறையில் பஸ்ஸில் கஞ்சா கடத்திய நபர்கள்

அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் தனியார் பஸ் நடத்துநர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ் நடத்துநர், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில், அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கஞ்சாவை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பஸ் நடத்துநர், மருதானையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply