நவம்பர் மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி! இராணுவத் தளபதி

நாடளாவிய ரீதியில் கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொரோனாத் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், சுற்றுலாத் துறையினர் மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply