மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்ற அதேவேளை, ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோல, எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்திற்குள் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






