எயிட்டி கிளப் கேளிக்கை விடுதி பிரதமரால் திறந்துவைப்பு!

கொழும்பில் புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டது.

எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும் முகமாக பிரதமர் அவ்வளாகத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்ததுடன், நினைவுப் பலகையையும் திறந்து வைத்தார்.

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உதய நாணயக்கார எயிட்டி கிளப் தகவல் சிற்றேடு பிரதமருக்கு வழங்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளை மேற்கொண்டமைக்காக கடற்படை கொமடோர் எச்.எஸ்.பாலசூரியவுக்கு பிரதமரால் நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.

எயிட்டி கிளப் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் புனரமைப்பு பணிகளை கடற்படையினர் பொறுப்பேற்று முன்னெடுத்தனர்.

1971 கலவரத்தின் காரணமாக அப்போதைய அரசாங்கம் இவ்வளாகத்தை இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைத்தது. 1978 ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கத்தினால் எயிட்டி கிளப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனைக்கமைய இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கமைய தற்போது எயிட்டி கிளப் அலங்காரமான நிறைவை பெற்றுள்ளது.

இங்குள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி விருந்தோம்பலுடன் கூடிய வோட்டர்ஸ் எட்ஜ் நட்சத்திர ஹோட்டல் அனுபவத்தை எயிட்டி கிளப் ஊடாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply