கரும்பூஞ்சை நோயால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்தார்.
அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றின் பின்னரான விளைவுகளால் கரும்பூஞ்சை நோய் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது






