சேறு பூசாது, முடிந்தால் வேலை செய்து தங்களை தோற்கடித்துக் காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபை 20 பில்லியன் லாபம் பெற்றதாகவும், முடிந்தால் இலங்கை மின்சார சபையை 21 பில்லியன் லாபம் பெற வைத்து தம்மை தோற்கடிக்குமாறு அவர் அரசாங்க தரப்பிடம் சவால் விடுத்துள்ளார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 67 பில்லியன் எரிபொருள் விலை குறைந்து நாட்டு மக்களுக்கு தமது காலத்தில் நிவாரணம் வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முடிந்தால் 68 பில்லியனுக்கு எரிபொருள் நிவாரணத்தை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதனைவிடுத்து, நாடாளுமன்ற வரப்பிரசாதத்தின் பேரில் சேறு பூச வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த வட்டுக்கோட்டை மக்கள்!






