கொரோனா தொற்று உறுதியான 448 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 448 பேர் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 534,871 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 18ஆயிரத்து 569 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 276 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 502,740 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply