2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் உரைபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் இவ்விடயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கமைய, வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு நேரத்தை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.






