பூரான் கடித்து இரண்டரை மாதக் குழந்தை மரணம்!

பூரான் கடித்து இரண்டரை மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் புத்தளம் மாவட்டம், முந்தல் பகுதியில் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

படுக்கையில் வைத்தே குழந்தையைப் பூரான் கடித்துள்ளது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இரவு தாயுடன் குழந்தை உறங்கிய நிலையில், காலையில் குழந்தை அசைவின்றி இருந்தது எனவும், இதன்போது குழந்தையின் முதுகில் காயம் ஒன்று இருந்தது எனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

எனினும் இதனைத் தொடர்ந்து குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் அந்தக் குழந்தை உயிரிழந்திருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குழந்தை உறங்கிய இடத்தில் இருந்து பூரான் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விஷப் பூச்சி கடித்தே குழந்தை உயிரிழந்துள்ளதென மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply