சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட உரத்திற்கான கெடுப்பனவு நிறுத்தம்!

பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை நிறுத்த இலங்கை உர நிறுவனம் இடைக்கால தடையுத்தரவை பெற்றுள்ளது.

குறித்த சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவர் மற்றும் அரச வங்கியொன்றுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்தினால் நேற்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இவ் இடைக்கால தடையுத்தரவிற்கமைய, சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் அரச வங்கியால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.

Leave a Reply