சீனாவிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா கொண்ட சேதனப் பசளையைக் கொண்ட கப்பல், துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் ஹாபர் மாஸ்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சீன நிறுவனத்திற்கு கொடுப்பனவை மேற்கொள்வதை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவை இலங்கை உர நிறுவனம் பெற்றுள்ளது.
குறித்த சீன நிறுவனம் அதன் உள்ளூர் பிரதிநிதி கடன் கடிதத்தை வழங்கியுள்ள உரிய அரச வங்கிக்கு எதிராக குறித்த இடைக்கால தடையுத்தரவை, இலங்கை உர நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேதனப் பசளையை இந்நாட்டுக்கு கொண்டுவரும் விலைமனு கோரலைப் பெற்ற சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளை மாதிரி, விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அர்வீனியா (Erwinia) எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply