வடக்கில் ஐந்து வயதுச் சிறுவன் உட்பட 26 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உட்பட வடக்கில் இன்று 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் சாவகச்சேரியிலும் மற்றொருவர் வவுனியாவிலும் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply