ஆளும் கட்சி எம்பிக்கள் உடன் கோட்டா இன்று சந்திப்பு.

ஆளுங்கட்சியின் தீர்க்கமானதும் முக்கியத்துவமிக்கதுமான கூட்டமொன்று இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

அரசுக்குள் இருக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் அண்மைக்காலமாக எழுப்பிவரும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாகப் பேசப்படவுள்ளதாக அறியமுடிந்தது.

குறிப்பாக கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்திக் பங்குகள் விற்பனை, விவசாயிகளின் பிரச்சினை, ஆசிரியர் போராட்டம் தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன குறித்து இன்றைய சந்திப்பில் பேசப்படவுள்ளதாக அறியப்படுகின்றது.

ஏற்கனவே, இந்த விடயங்கள் குறித்து பேச்சு நடாத்த அரசின் பங்காளிக்கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன. ஆனால், அதற்கான நேரம் ஜனாதிபதித் தரப்பினரிடம் இருந்து கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினையில் இன்று நடக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதென அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply