பதுளை, பண்டாரவளையின் இருவேறு பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் ஆணொருவரின் சடலமும், மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலமும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடங்களுக்கு பொலிஸார் இன்று காலை சென்று சடலங்களை மீட்டுள்ளனர்.
சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.






