திருமலை – மொரவெவ பகுதி விவசாயிகள் நாளை போராட்டம்!

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரி, நாளை காலை 9 மணிக்கு மொரவெவ விவசாயிகள் அமைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

திருகோணமலை – மொரவெவ பகுதி விவசாயிகள், அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டமானது நாளை காலை 9 மணியளவில் திருகோணமலை – மொரவெவ பகுதியில் இடம்பெறவுள்ளது.

விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தை வழங்குமாறு கோரி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply