கட்சியின் தலைமை பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கம்!

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார் என் கட்சி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத அதிபர், ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, கடந்த வாரம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்

இந்த அறிவிப்பு பாரிய விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் தனது கருத்தை மீளப்பெற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன.

அத்துடன் இந்த அறிவிப்பு தொடர்பில் எதிர்க் கட்சிகளும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் இந்த அறிவிப்பு தொடர்பில் இலங்கை கமியூனிஸ்ட் கட்சியும் கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில், கட்சியின் தலைவர் பதிவயிலிருந்து அவரை நீக்கியுள்ளது.

அரிசியின் விலை மீண்டும் உயர்வு!

Leave a Reply