இலங்கைத் துறைமுகங்களில் இந்தியக் கப்பல்கள்!

ஆறு இந்திய கப்பல்கள் நான்கு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் முதல் பயிற்சி படையணியின் ஆறு இந்திய கப்பல்கள் இலங்கை வந்துள்ளது.

இந்தக் கப்பல்களில் ஐ.என்.எஸ்.மகர், ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் அதேவேளை, ஐ.என்.எஸ்.சுஜாதா, தரங்கனி, சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகிய கப்பல்கள் திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன.

கட்சியின் தலைமை பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கம்!

Leave a Reply