நெல்லின் உத்தரவாத விலையை உயர்த்துவதே எனது இலட்சியம்! ஜனாதிபதி

இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் விவசாயத்தில் ஈடுபடும் உலகின் ஒரே நாடாக இலங்கையை உலகுக்கு அறிமுகப்படுத்தினால் அதுவே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உடுபத்தாவ புன்னஹெபொல கரிம உர பதப்படுத்தும் நிலையம் மற்றும் இயற்கை விவசாய பண்ணைகளை நேற்று பார்வையிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்த பொருட்களுக்கு ஒரு நல்ல சந்தையை உருவாக்க முடியும். அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

இதன் மூலம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்று 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்க முடியும். அதுவே தனது நோக்கம். அதனை இலக்காகக் கொண்டே செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply