மின் கம்பத்தில் லொறி மோதி விபத்து: இருவர் படுகாயம்!

புத்தளம், கற்பிட்டி பிரதான வீதியின் பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் லொறி ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளார்.

நுரைச்சோலையிலிருந்து கற்பிட்டி பகுதியை நோக்கிப் பயணித்த சிறிய லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, லொறி பாரிய சேதமடைந்தமையுடன், அதில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply