கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

மன்னார், தாழ்வுபாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் கீரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ 370 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை இளைஞனிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விதானகே தலைமையிலான பொலிஸ் குழுவினர், கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply