தாய்வானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தாய்வானில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு வடக்கே 65 கிலோமீட்டர் தொலைவிலும், யிலானிலிருந்து 30 கிலோமீட்டர் தென்கிழக்கே 60 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அச்சத்தில் மக்கள் வீதிகளுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தாய்வான் நெருப்பு வளையத்திற்கு அருகில் அமைந்துள்ளதுடன் பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் மிக அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply