வெள்ளைச் சீருடை, சப்பாத்து அவசியமில்லை! கல்வியமைச்சு

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், ஆரம்பப்பிரிவு பாடசாலைகளை நாளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக, மக்களது நிலமையைக் கருத்திற்கொண்டு நாளை பாடசாலை செல்லும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, சப்பாத்து மற்றும் வெள்ளை சீருடை இல்லாத மாணவர்கள் தம்மிடம் இருப்பதை கொண்டு அது கலர் ஆடையாக இருந்தாலும் சரி, சாதாரண பாதணியாக இருந்தாலும் சரி இப்போதைக்கு அணிந்து பாடசாலை செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply