வடமராட்சி, மருதங்கேணிப் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.
தனியார் காணி ஒன்றை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும்போது குறித்த வெடிப்பொருட்கள் இருப்பதை அவதானித்தார். அத்துடன், பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிசார் விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதில் ஆர்.பி.ஜி வெடிகுண்டுகள் 12, எறிகணைகள் 20 ஆகியவற்றுடன் நூற்றுக் கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.







