இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது.
மாணவர்களிடையேயான புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இளமாணி மாணவர் புத்தாக்கப் போட்டியில், யாழ்ப்பாண இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின், யாழ். பல்கலைக்கழக பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட உணவுக் கழிவுகளில் இருந்து லஞ்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் பொறி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன், பிரபலமான கண்டுபிடிப்புக்கான விருதுக்குரியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியின் வெற்றியாளர் தெரிவுக்கான நடுவர்களாக, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்.






