டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்!

யாழ். மல்லாகம் சந்தியில் டிப்பரும் மோட்டார் சைக்கிள் மோதி இன்று மாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயத்திற்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply