
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.
தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகளை இவ்வாறு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





