தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒருநாள் விநியோக சேவை இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் ஒருநாள் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டிய அதற்கான முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திக்க தெரிவித்துள்ளார்.






