நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் : நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்?

<!–

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் : நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்? – Athavan News

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கியமான இரண்டு நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 இல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலங்களை மத்திய அரசு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி சட்டமூலத்தை தவிர கூடுதல் மானியக் கோரிக்கை சட்டமூலத்தையும் மத்திய அரசு கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply