காணாமல் போன நான்கு கடற் தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியன்று, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 7 நாள்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன், நான்கு கடற்றொழிலாளர்கள், கடலுக்குச் சென்றிருந்தனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக, கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்ததுடன், இலங்கை மற்றும் இந்திய கடற் பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவலை தெரியப்படுத்தி, ஒத்துழைப்பைக் கோரியிருந்தார்.

அத்துடன், காணாமல் போன கடற்றொழிலாளர்களும், அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நான்கு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply