காலி பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், 21 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் உள்ள 30 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள், அங்குனுகொல பெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






