கம்யூனிச கட்சியின் பதில் தவிசாளராக வீரசுமன!

ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சியின் பதில் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விரசுமன வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சியின் மத்திய குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே மத்திய குழுவினால் நீக்கப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பள விடயத்தில் பொருத்தமற்ற கருத்தை வெளியிட்ட காரணத்தால் தவிசாளர் பதவியிலிருந்து கொல்லுரே நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply