மக்களின் துரித செயற்பாட்டால் உயிருடன் மீட்கப்பட்ட மான் குட்டி

மகாகும்புக்கடவல காட்டுப் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்ட மான் குட்டியொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – மகாகும்புக்கடவல காட்டுப் பகுதியில் தனியாக நின்ற மான் குட்டி ஒன்றை அவதானித்த அப்பகுதி மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படத்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மான்இ மூன்று மாதக் குட்டியென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த மான் குட்டி நிகாவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply