யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்

யாழில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 36 வயதுடைய நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதன்படி, வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த நபரின் சடலத்தினையும் மீட்டுள்ளனர்.

தற்போது, மீட்கப்பட்ட நபரின் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply