மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.
இச் சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப் பொதியில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஆதனடிப்படையில், போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து, புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.






