யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில், நேற்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவர்களை வழிமறித்த பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, குறித்த மூவரும் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.






