ஜனாதிபதியுடன் ஜப்பான் தூதுவர் சந்திப்பு!

தனது சேவைக்காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

ஆறு இலட்சம் அஸ்ட்ரா ஜெனெக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், கொரோனாத் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்குவதற்கும், சுகியாமா அக்கிராவால் பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு, ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத்தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித்தலைவர் கட்சுகி கொட்டாரோ ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பளையில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Leave a Reply