நாட்டில் அதிகரிக்கும் யாசகர்களின் எண்ணிக்கை

நாட்டில் யாசகர்களின் அதிகரிப்பு ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினருர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற பொது கணக்குகள் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க சரியான திட்டம் இருக்க வேண்டும் எனவும் பொது கணக்குகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்இ அத்தகைய ஆராய்ச்சிகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பல்கலைக்கழக மட்டத்தில் யாசகர்கள் குறித்து அதிகளவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்இ அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களம் பெறுவது முக்கியமானதாக இருக்கும் என்றும் அக்குழு கருதுகிறது.

அத்துடன் நாட்டில் அதிகரிக்கும் யாசகர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரு கூட்டுத்திட்டம் தேவை என்றும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply