சங்கானையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்ட போதை பொருட்கள்

மானிப்பாய் – சங்கானை பகுதியிலுள்ள அராலி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 2 கிலோ எடையுடைய கஞ்சாப் பொதி மற்றும் போதை மாத்திரைகளை இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெறுள்ளது.

அதன்படி, கஞ்சா பொதி, உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகள் இருபது மற்றும் தராசு என்பன மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மீட்கப்பட்ட பொருட்களை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply