ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் முன்றில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா, ஹட்டன் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக இன்று மதியம் 3 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாகத் தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைத்து மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டும் ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார்மயப்படுத்தத்தப்பட வேண்டாம் எனவும், ஜனாதிபதி தலையிட்டு ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்தனர்.







