இடைவிலகியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடைவிலகயுள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள் பாடசாலை செல்லாதவர்கள் (இடைவிலகியோர்) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற வருவோர் தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு சான்றிதழின் பிரதியுடனும் 18 வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் பெற்றோர்களுடன் வருகை தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply