சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய ஆசிரியர்கள், அதிபர்கள் ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு, பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அழுத்தத்தைக் கொடுக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்தபோராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.






