கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளது.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து, மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி டெலிகொம் சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply